தாக்குதல் நடத்தியவரின் தகவல்களை வழங்க தயார்

நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவரின் தகவல்களை பெற்றுக்கொடுக்க தயார்: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

by Bella Dalima 05-09-2021 | 10:45 AM
Colombo (News 1st) நியூசிலாந்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத சந்தேகநபர் தொடர்பான தகவல்களை, தேவைப்படும் பட்சத்தில் உடனடியாக பெற்றுக்கொடுக்க தயாராகவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியை சேர்ந்த ஒருவரே நியூசிலாந்தில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் கொழும்பில் சில காலம் வசித்ததாகவும் தகவல் வௌியாகியுள்ளது. 31 வயதான குறித்த சந்தேகநபர் 11 வருடங்களுக்கு முன்னர் நியூசிலாந்திற்கு சென்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது. இம்மாதத்தின் ஆரம்பத்தில் சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் தொலைபேசியூடாக கலந்துரையாடியதாகவும் கூறப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் தாக்குதல் மேற்கொண்ட அடிப்படைவாத சந்தேகநபர் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.