by Bella Dalima 04-09-2021 | 8:42 PM
Colombo (News 1st) அமில பிரசன்ன ஹெட்டிஹேவா எனும் சன்ஷைன் சுத்தா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர்கள் பயணித்ததாக சந்தேகிக்கப்படும் வேன் மாத்தறை கொட்டவிலவில் இன்று (03) காலை கண்டுபிடிக்கப்பட்டது.
திஹகொட பண்டாரவத்தை பாலத்திற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் இந்த வேன் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்போது வாகனத்தின் இலக்கத் தகடுகளும் சேதமடைந்திருந்தன.
கடந்த வருடம் மார்ச் மாதம் 30 ஆம் திகதியும் சன்ஷைன் சுத்தா மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அவர் உயிர் தப்பியிருந்தார்.
இந்நிலையில், வறக்காபிட்டியவிலிருந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது நேற்று மீண்டும் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்தார்.
மாத்தறை வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவிருந்த நிலையில், அதற்கு முன்னதாக மேற்கொள்ளப்பட்ட துரித antigen பரிசோதனையில் சன்ஷைன் சுத்தா COVID தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதி செய்யப்பட்டது.