by Bella Dalima 04-09-2021 | 4:05 PM
Colombo (News 1st) இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1700 கிலோகிராம் மஞ்சள் தமிழகத்தின் இராமநாதபுரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல் சோதனைச் சாவடியில் வாகன சோதனையின் போதே லொறியொன்றிலிருந்து மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
58 மூடைகளில் 1,700 கிலோ சமையல் மஞ்சள் பொதியிடப்பட்டிருந்ததாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மஞ்சளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட லொறியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவம் தொடர்பில் ராமநாதபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.