படகில் 300 கிலோகிராம் ஹெரோயின்; வௌிநாட்டவர் எழுவர் கைது

படகில் 300 கிலோகிராம் ஹெரோயின்; வௌிநாட்டவர் எழுவர் கைது

எழுத்தாளர் Bella Dalima

04 Sep, 2021 | 2:59 pm

Colombo (News 1st) தென் கடற்பிராந்தியத்தில் படகில் இருந்து 300 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

301 பொதிகளில் இருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருளுடன் வௌிநாட்டவர்கள் ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில நாட்களாக முன்னெடுத்த விசேட நடவடிக்கையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறினார்.

அவர்கள் பயன்படுத்திய படகும், கடற்படை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்