பொருளாதார மத்திய நிலையங்கள் 2 தினங்களுக்கு திறப்பு

பொருளாதார மத்திய நிலையங்கள் 05, 06 ஆம் திகதிகளில் திறக்கப்படும்

by Staff Writer 03-09-2021 | 10:58 AM
Colombo (News 1st) நாட்டிலுள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களையும் எதிர்வரும் 05, 06 ஆம் திகதிகளில் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையங்களில் எஞ்சும் மரக்கறிகள் உள்ளிட்ட விவசாய உற்பத்திகளை நடமாடும் வாகனங்களூடாக விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, பொருளாதார மத்திய நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொருளாதார மத்திய நிலையங்களின் முகாமையாளருடன் தொடர்பினை மேற்கொண்டு, தங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்துகொள்ள முடியும் என விவசாய இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.