நியூசிலாந்தில் இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை

by Bella Dalima 03-09-2021 | 12:53 PM
Colombo (News 1st) நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று (03) முற்பகல் நடத்தப்பட்ட இந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், மூவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். நியூசிலாந்தின் Auckland பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் நுழைந்த நபர் கத்திக்குத்து தாக்குதலை ஆரம்பித்த 60 செக்கன்ட்களில் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார். குறித்த நபர் இலங்கையை சேர்ந்த அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடும் ஒருவர் என ஜெசிந்தா ஆர்டன் குறிப்பிட்டுள்ளார். எனினும், கடந்த 10 வருடங்களாக அந்நபர் நியூசிலாந்தில் வசித்து வந்துள்ளார். 5 வருடங்களாக அந்நபரை நியூசிலாந்தின் பாதுகாப்பு தரப்பினர் கண்காணித்து வந்துள்ளனர். IS பயங்கரவாத குழுவினரை பின்தொடரும் அந்நபர் கடந்த 2011 ஆம் ஆண்டில் நியூசிலாந்து சென்றுள்ளதாக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. வெறிக்கத்தக்க, தவறான இந்த செயலை செய்த நபர் மாத்திரமே இந்த தாக்குதலுக்கு பொறுப்பாளியாவார் என ஜெசிந்தா ஆர்டன் குறிப்பிட்டுள்ளார். தாக்குதல் நடத்திய நபர் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.