கோதுமை மா விலையை 12 ரூபாவால் அதிகரித்தது பிரிமா

கோதுமை மா விலையை 12 ரூபாவால் அதிகரித்தது பிரிமா நிறுவனம்

by Bella Dalima 03-09-2021 | 12:04 PM
Colombo (News 1st) கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபையிடம் வினவியபோது, கோதுமை மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறியக்கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும், கோதுமை மாவிற்கான விலை அதிகரிப்பிற்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டது.