அதிதீவிர சிகிச்சை பிரிவுகளில் இடப்பற்றாக்குறை

அதிதீவிர சிகிச்சை பிரிவுகளின் கொள்திறன் உச்சமட்டத்தை எட்டியது

by Staff Writer 03-09-2021 | 10:42 AM
Colombo (News 1st) வைத்தியசாலைகளிலுள்ள அதிதீவிர சிகிச்சை பிரிவுகளின் கொள்திறன் உச்சமட்டத்தை எட்டியுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்தனர். நாளாந்தம் பதிவாகும் கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு, சுகாதார வழிமுறைகளை உரியவாறு பின்பற்ற வேண்டும் என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே அறிவுறுத்தினார். வைத்தியசாலைகளுக்கான மனிதவள பற்றாக்குறையும் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். நாளாந்தம் சுமார் 4000 நோயாளர்கள் பதிவாவதுடன், 200-க்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாவதாக அவர் கூறினார். இதனால் நோய் தொற்றுநிலை தொடர்ந்தும் அபாயகரமானதாகவே காணப்படுவதாகவும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டார். ஒக்சிஜன் தேவை காணப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன், நாட்டில் தற்போது டெல்டா கொரோனா பிறழ்வே அதிகமாக பரவி வருகிறது.