நாட்டில் உள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

நாட்டில் உள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

நாட்டில் உள்ள வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Sep, 2021 | 5:53 pm

Colombo (News 1st) தற்போது நாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து விதமான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் ஒக்டோபர் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, 2021 மே மாதம் 11 ஆம் திகதி முதல் 2021 ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான விசா கட்டணங்கள் மாத்திரமே அறவிடப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், எவ்வித தண்டப்பணமும் அறவிடப்படமாட்டாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்