தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 13 ஆம் திகதி வரை நீடிப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 13 ஆம் திகதி வரை நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

03 Sep, 2021 | 12:30 pm

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க இதனை உறுதிப்படுத்தினார்.

ஊரடங்கு சட்டம் மேலும் 7 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவும் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிப்பதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கு காலப்பகுதியில் ஒழுங்கு விதிகளை கடைப்பிடிக்குமாறும் வீடுகளில் இருக்குமாறும் சுகாதார அமைச்சர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள குறித்த காலப்பகுதியை பயன்படுத்திக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்