111 கோல்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை

111 கோல்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை

111 கோல்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோ உலக சாதனை

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2021 | 1:13 pm

Colombo (News 1st) ஆடவருக்கான சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் அதிக கோல்களைப் போட்ட வீரர் என்ற உலக சாதனையை போர்த்துக்கல்லின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ படைத்துள்ளார்.

உலகக்கிண்ண தொடருக்கான தகுதிகாண் சுற்றில், அயர்லாந்து குடியரசுக்கு எதிரான போட்டியில் 2 கோல்களை போட்டதன் மூலம் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன் மூலம் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் 111 கோல்களை கிறிஸ்டியானோ ரொனால்டோ போட்டுள்ளார்.

1993 முதல் 2006 வரை ஈரான் அணியில் விளையாடிய அலி டாய் (Ali Daei) 109 கோல்களை போட்டதே இதுவரை உலக சாதனையாகவிருந்தது.

2020 யூரோ கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பிரான்ஸிற்கு எதிரான போட்டியில் இரண்டு கோல்களை போட்டு இந்த சாதனையை கிறிஸ்டியானோ ரொனால்டோ சமப்படுத்தியிருந்தார்.

90 அல்லது அதற்கு மேற்பட்ட சர்வதேச கோல்களை போட்ட வீரர்களாக அலி டாயும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மாத்திரமே பதிவாகியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்