சுற்றுலா பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம்

நாளாந்தம் 1000 சுற்றுலா பயணிகளை அழைத்து வர விசேட வேலைத்திட்டம்

by Bella Dalima 02-09-2021 | 10:43 AM
Colombo (News 1st) நாளாந்தம் 1000 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசேட வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நாட்களில் நாளாந்தம் 250 வௌிநாட்டு சுற்றுலா பயணிகளே நாட்டிற்கு வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார். அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருகின்றனர். சுகாதார அமைச்சின் விதிமுறைகளுக்கு அமைவாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார். சுகாதார அமைச்சினால் குறிப்பிடப்பட்டுள்ள ஆபத்து மிக்க நாடுகளை தவிர ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், காப்புறுதி பெற்றிருத்தல் அவசியமாவதுடன், PCR பரிசோதனைகளுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு தடுப்பூசிகளையும் பெற்ற ஒருவருக்கு PCR பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனின், அவர்களுக்கு வௌியே செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளது. தடுப்பூசிகளை பெறாதவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக புராதன இடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சரணாலயங்கள் உள்ளிட்ட 22 சுற்றுலாத்தலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.