6, 7ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்ற சபை அமர்வு

செப்டம்பர் 6, 7 ஆம் திகதிகளில் மாத்திரம் பாராளுமன்ற சபை அமர்வு

by Bella Dalima 02-09-2021 | 6:50 PM
Colombo (News 1st) பாராளுமன்ற சபை அமர்வை எதிர்வரும் 6, 7 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று (02) இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார். திங்கட்கிழமை (06) விசேட பாராளுமன்ற தினமாக கேள்விகளுக்கு பதில் வழங்குவதற்கு முன்னர் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிமுறைகள் தொடர்பில் அன்றைய தினம் விவாதிக்கப்படவுள்ளதாக இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.