சித்துல்பவ்வ திருட்டு: விசாரணைக் குழு நியமனம்

சித்துல்பவ்வ தொல்பொருட்கள் திருட்டு: விசாரணைக் குழு நியமனம்

by Bella Dalima 02-09-2021 | 11:53 AM
Colombo (News 1st) யால சரணாலயத்திலுள்ள வரலாற்று சிறப்புமிக்க சித்துல்பவ்வ (SITHTHULPAWWA) புனித பூமியில் தொல்பொருட்களை திருடியமை தொடர்பிலான விசாரணைக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் தென் மாகாண உதவி பணிப்பாளரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் முன்னெடுக்கப்படும் பொலிஸ் நடமாடும் ​சேவைகளை அதிகரிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருள் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார். குறித்த திருட்டுச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பிற்கிணங்க அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அனுர மனதுங்க தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யால தேசிய சரணாலயத்தில் அமைந்துள்ள சித்துல்பவ்வ ரஜமஹா விஹாரையில் இருந்து 190 மீட்டர் தூரத்தில் சித்துல்பவ்வ புனித பூமி அமைந்துள்ளது.