தமிழக முதல்வரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்

தமிழக முதல்வரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்

தமிழக முதல்வரை சந்தித்தார் ஜீவன் தொண்டமான்

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2021 | 7:00 pm

Colombo (News 1st) தென்னிந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கும் இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மலையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பல்கலைக்கழகத்திற்கும் தமிழக அரசாங்கத்திற்கும் இடையிலான உறவை மேம்படுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பின் போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் அண்மையில் அறிவித்த நலத்திட்டங்களுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், அது குறித்து இலங்கை அரசுக்கு பரிந்துரைப்பதாக தமிழக முதல்வரிடம் தெரிவித்ததாக ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்