அச்சுவேலியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அச்சுவேலியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

அச்சுவேலியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Bella Dalima

02 Sep, 2021 | 5:34 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – அச்சுவேலி தெற்கு பகுதியில் மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அச்சுவேலி – நாவற்காடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்

அச்சுவேலியில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்தது.

வயல்வௌியில் வேலை செய்துகொண்டிருந்தபோது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்