by Staff Writer 01-09-2021 | 6:06 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளாகி வீடுகளில் உயிரிழக்கும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
கடந்த 27 ஆம் திகதியுடன் முடிவுக்குவந்த வாரத்தில் மாத்திரம் 194 பேர் வீடுகளில் உயிரிழந்ததாக அந்தப் பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த கொரோனா உயிரிழப்புகளில் 76.6 வீதமாக இது பதிவாகியுள்ளது.
இதேவேளை, இன்று (01) மாலை 6.50 வரையில் 2,884 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான ஒருவார காலத்தில் கொவிட் தொற்றுக்குள்ளாகி 99 பெண்களும் 95 ஆண்களும் வீடுகளில் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 1,094 பேர் வீடுகளில் உயிரிழந்திருக்கின்றனர்.
மொத்த மரணங்களில் 13.1 வீதம் வீடுகளில் இடம்பெற்றுள்ளன என தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
இதனைத் தவிர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்களுக்கிடையில் 66 பேர் கடந்த வாரத்தில் உயிரிழந்தனர்.
அவ்வாறு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 493 என தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.
வைத்தியாலையில் அனுமதிக்கப்படும் சந்தர்ப்பங்களுக்கிடையில் உயிரிழந்தோரின் இறப்பு வீதம் 5.9 ஆகும்.
கொவிட் தொற்றுக்குள்ளானோரில் 20 வீதமானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட முன்னர் உயிரிழந்திருப்பதாக தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.