நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாச வாகன உற்சவம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாச வாகன உற்சவம்

by Staff Writer 01-09-2021 | 10:37 PM
Colombo (News 1st) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் 20 ஆம் நாளான இன்று (01) கைலாச வாகன உற்சவம் நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தம்ப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி, தெய்வானை சகிதம் கைலாச வாகனத்தில் எழுந்தருளினார். மேள, தாளங்களுடன் முருகப்பெருமானின் ஆலய உள் வீதி உலா நடைபெற்றது.