அயர்லாந்து சனத்தொகை 5 மில்லியனை கடந்தது

அயர்லாந்து சனத்தொகை 5 மில்லியனை கடந்தது

by Staff Writer 01-09-2021 | 4:18 PM
Colombo (News 1st) அயர்லாந்தின் சனத்தொகை 5 மில்லியனை கடந்துள்ளது. இந்த ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் 5.1 மில்லியனாக சனத்தொகை பதிவாகியுள்ளது. 1851 ஆம் ஆண்டிற்கு பின்னர் அந் நாட்டில் முதல்தடவையாக சனத்தொகை 5 மில்லியனை கடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 12 மாதங்களில் 34,000 இனால் சனத்தொகை அதிகரித்துள்ளதுடன், இம்மாதம் ஏப்ரல் மாதம் வரையில் 65 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் எண்ணிக்கை 22,200 ஆல் அதிகரித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பிற்கு இடம்பெயர்வும் காரணம் என அயர்லாந்து அரசு தெரிவித்துள்ளது.