நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவம் இன்று

நல்லூர் கந்தசுவாமி ஆலய சூர்யோற்சவம் இன்று

எழுத்தாளர் Staff Writer

31 Aug, 2021 | 9:10 pm

Colombo (News 1st) நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 19ஆம் நாளான இன்று (31) சூர்யோற்சவம் நடைபெற்றது.

நல்லூர் கந்தனுக்கு நடத்தப்பட்ட விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.

அதன் பின்னர் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சூரிய பகவான் எழுந்தருளி உள்வீதி வலம் வந்தார்.

அகிலம் போற்றும் அலங்கார கந்தனின் மகோற்சவப் பெருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்து 25 நாட்கள் பூஜைகள் நடத்தப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி இரதோற்சவம் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்