by Staff Writer 30-08-2021 | 10:35 PM
Colombo (News 1st) மலையக இந்திய வம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்திற்காக அயராது உழைத்த அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 108 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் 108 ஆவது ஜனன தினம் இன்று (30) இறம்பொடையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இறம்பொடை - தவலந்தென்ன முருகன் ஆலயத்தில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து இறம்பொட - தவலந்தென்ன தொண்டமான் கலாச்சார மண்டபத்தில் ஜனன தினம் அனுஷ்டிக்கப்பட்டது
அமரர் செளமியமூர்த்தி தொண்டமானின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் கொத்மலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.