நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை

நாட்டில் நாளாந்தம் 140 தொன் ஒக்சிஜன் தேவை

by Staff Writer 29-08-2021 | 10:15 AM
Colombo (News 1st) கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்காக வாராந்தம் 300 தொன் ஒக்சிஜனை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதற்கு தீர்மானித்துள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்நாட்களில் கொரோனா நோயாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 140 தொன் ஒக்சிஜன் வழங்கப்படுவதாக அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்னர் நாட்டில் நோயாளர்களுக்காக 20 தொன் ஒக்சிஜன் அளவு போதுமானதாக இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.