தனிமைப்படுத்தலை மீறிய மேலும் 718 பேர் கைது

தனிமைப்படுத்தலை மீறிய மேலும் 718 பேர் கைது

by Staff Writer 29-08-2021 | 11:38 AM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 718 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (29) காலை 06 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 61,001 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, மேல் மாகாணத்தின் 13 எல்லைகளில் தொடர்ந்தும் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.