அத்தனகல்லவில் பலத்த காற்று வீசியதில் 82 வீடுகளுக்கு சேதம்

அத்தனகல்லவில் பலத்த காற்று வீசியதில் 82 வீடுகளுக்கு சேதம்

அத்தனகல்லவில் பலத்த காற்று வீசியதில் 82 வீடுகளுக்கு சேதம்

எழுத்தாளர் Staff Writer

29 Aug, 2021 | 2:13 pm

Colombo (News 1st) அத்தனகல்ல பிரதேசத்தை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 82 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

ரன்பொக்குனகம வீட்டுத்தொகுதியில் சுமார் 30 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக கம்பஹா மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் அஜித் நிஷாந்த தெரிவித்துள்ளார்.

இதனிடையே, யட்டியன, திஹாரிய, மல்வத்த மற்றும் மாஇம்புல பகுதிகளில் 30 வீடுகள் பலத்த காற்றினால் சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்