Protein உணவுகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

Protein நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறு கொரோனா நோயாளர்களுக்கு ஆலோசனை

by Chandrasekaram Chandravadani 28-08-2021 | 12:02 PM
Colombo (News 1st) வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. புரதச் சத்து நிறைந்த உணவுகள் மூலம் கொரோனா நோயாளர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் என நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். இதனைத்தவிர, விட்டமின் C நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொள்ளும் அதேநேரம், விட்டமின் D ஐ பெற்றுக்கொள்வதற்காக நாளொன்றில் அரைமணி நேரம் சூரிய ஔியில் இருப்பது முக்கியம் என வைத்திய நிபுணர் மேலும் கூறியுள்ளார். தானிய வகைகளை உணவில் சேர்த்துக்கொள்வதோடு தண்ணீர் அருந்துவது மிக முக்கியம் என கூறிய வைத்திய நிபுணர், இதன்போது சுடுநீர் அருந்துவது சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய செய்திகள்