மன்னார் வளைகுடாவை கண்காணிக்க அதிவிரைவு படகுகள்

மன்னார் வளைகுடா, பாக்கு நீரிணையை கண்காணிக்கவுள்ள தமிழக கடலோர காவல் படை

by Staff Writer 27-08-2021 | 10:28 PM
Colombo (News 1st) இலங்கையை அண்மித்த மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடற்பரப்புகளை கண்காணிக்க தமிழக கடலோர காவல் படையில் அதிவிரைவு படகுகள் இணைக்கப்படவுள்ளன. தமிழக கடலோர பாதுகாப்பு படையின் மேலதிக பணிப்பாளர் சந்தீப் மிட்டல் இதனை கூறியுள்ளார். இராமேஷ்வரத்தை அடுத்துள்ள ஓலைக்குடா கடற்கரை பகுதியில் 10,000 பனை மரங்களை நடும் திட்டத்தில் தமிழக கடலோர பாதுகாப்பு படையின் மேலதிக பணிப்பாளர் கலந்துகொண்டிருந்தார். பின்னர் கருத்து வௌியிட்ட அவர், தமிழக கடலோர காவல் படையில் அதிநவீன ரோந்து படகுகள் இருந்தாலும் மீனவர்களின் உதவியின்றி தம்மால் பாதுகாப்பு பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டினார். தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லை என தெரிவத்த சந்தீப் மிட்டல், மன்னார் வளைகுடா மற்றும் பாக்கு நீரிணை கடல் பகுதிகளை கண்காணிப்பதற்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அதிவிரைவு படகுகள் மண்டபத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவித்தார்.