உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கம்

உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கம்

உலகின் பாதுகாப்பான 50 நகரங்களில் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கம்

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2021 | 3:00 pm

Colombo (News 1st) உலகின் பாதுகாப்பான 50 நகரங்களுக்குள் இந்தியாவின் டெல்லியும் மும்பையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் இந்த பட்டியலில் முதலிடத்திலுள்ளது.

லண்டனை தளமாகக் கொண்ட The Economist Group ஊடக நிறுவனம் வௌியிடும் வருடாந்த பட்டியலிலேயே, உலகில் வாழ்வதற்கேற்ற பாதுகாப்பான நகரங்கள் நிரற்படுத்தப்பட்டுள்ளன.

கனடாவின் டொரன்டோ நகரம் இரண்டாவது இடத்திலும், சிங்கப்பூர், சிட்னி, டோக்கியோ ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலுமுள்ளன.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் 12 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

லண்டன் 15 ஆவது இடத்திலும், சீன தலைநகர் பீஜிங் 36 ஆவது இடத்திலும், ரஷ்ய தலைநகர் மொஸ்கோ 38 ஆவது இடத்திலுமுள்ளன.

இந்த பட்டியலில் இந்திய தலைநகர் டெல்லி 48 ஆவது இடத்தையும், வர்த்தக நகர் மும்பை 50 ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

 

world’s top 10 safest cities

  1. Copenhagen
  2. Toronto
  3. Singapore
  4. Sydney
  5. Tokyo
  6. Amsterdam
  7. Wellington
  8. Hong Kong
  9. Melbourne
  10. Stockholm

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்