by Staff Writer 26-08-2021 | 5:31 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, கலைவாணி வீதியில் நேற்று (25) இடம்பெற்ற கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொலைச்சம்பவம் தொடர்பில் சித்தங்கேணியை சேர்ந்த மூன்று சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியது.
தந்தையும் இரு மகன்களுமே கைது செய்யப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மல்லாகம் நீதவான் ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ. ஆனந்தராஜா இதன்போது உத்தரவிட்டார்.
சித்தங்கேணியில் 49 வயதான ஆண் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.
காணிப்பிரச்சினை தொடர்பில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து, இந்த கொலை இடம்பெற்றது.
சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த, உயிரிழந்தவரின் 20 வயதான மகள் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.