தடுப்பூசி ஏற்றல் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றமைக்கு UNICEF வாழ்த்து

தடுப்பூசி ஏற்றல் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றமைக்கு UNICEF வாழ்த்து

தடுப்பூசி ஏற்றல் விரைவாக முன்னெடுக்கப்படுகின்றமைக்கு UNICEF வாழ்த்து

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2021 | 4:03 pm

Colombo (News 1st) நாட்டில் தடுப்பூசி ஏற்றல் செயற்பாடு விரைவாகவும் வெற்றிகரமாகவும் முன்னெடுக்கப்படுகின்றமை தொடர்பில் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரும், UNICEF அமைப்பின் இலங்கை பிரதிநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

COVAX திட்டத்தினூடாக ஜப்பானின் நன்கொடையில் UNICEF மற்றும் ஜப்பான் தூதரகம் இணைந்து, தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கான 750 உபகரணங்களையும் தடுப்பூசிகளை களஞ்சியப்படுத்துவதற்கான 300 குளிர்சாதன பெட்டிகளையும் 100 குளிர்கால பாதுகாப்பு குளிர்சாதன பெட்டிகளையும் இலங்கைக்கு நேற்று (25) நன்கொடையாக வழங்கின.

இந்த நன்கொடையை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல பெற்றுக்கொண்டார்.

நாட்டின் சுகாதார துறைக்காக, ஜப்பான் அரசாங்கம் கடந்த வருடத்தில் மாத்திரம் 16.2 மில்லியன் டொலர் நன்கொடை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்