காபூல் விமான நிலையம் அருகில் குண்டுவெடிப்பு

காபூல் விமான நிலையம் அருகில் குண்டுவெடிப்பு

காபூல் விமான நிலையம் அருகில் குண்டுவெடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

26 Aug, 2021 | 8:27 pm

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையம் (Hamid Karzai Airport) அருகில் குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராணுவ தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், விமான நிலையத்திற்கு வௌியில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு தொடர்பான விபரங்கள் இதுவரை வௌியாகவில்லை.

எவ்வாறாயினும், சம்பவ இடத்தில் துப்பாக்கிச்சூடுகள் இடம்பெற்றதாக தகவல்கள் பதிவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானிய படையினர் நிலைகொண்டிருந்த இடத்தில் இந்த குண்டு வெடிப்பு பதிவாகியுள்ளது.

தமது இராணுவத்தினருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லையென பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு கூறியுள்ளது.

இதுவொரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என அமெரிக்க அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வௌியிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்