இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அனுமதி

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அனுமதி

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் சுற்றுலா பயணிகள் இலங்கை வர அனுமதி

எழுத்தாளர் Staff Writer

26 Aug, 2021 | 1:32 pm

Colombo (News 1st) இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கான அனுமதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார ஒழுங்கு விதிகளுக்கு அமைய, இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

இலங்கையினால் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை தர முடியும் என அவர் கூறினார்.

இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியவர்கள், நாட்டிற்கு வருகை தந்ததும் PCR பரிசோதனை செய்யப்பட்டதன் பின்னர், சுற்றுலாவில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள் என சுற்றுலாத்துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்தியா தவிந்த ஏனைய நாடுகளை சேர்ந்த தடுப்பூசி ஏற்றாதவர்கள் நாட்டிற்கு சுற்றுலாவிற்கு வருகை தந்தால், 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்கள் சுற்றுலாவில் ஈடுபட முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்