அமோனியம் நைட்ரஜன் வைத்திருந்த இருவர் மாத்தறையில் கைது

அமோனியம் நைட்ரஜன் வைத்திருந்த இருவர் மாத்தறையில் கைது

அமோனியம் நைட்ரஜன் வைத்திருந்த இருவர் மாத்தறையில் கைது

எழுத்தாளர் Bella Dalima

26 Aug, 2021 | 12:44 pm

Colombo (News 1st) மாத்தறை – மெத்தவத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, அனுமதிப்பத்திரமின்றி அமோனியம் நைட்ரஜனை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 1050 கிலோ அமோனியம் நைட்ரஜனும் 672 நைட்ரஜன் குச்சிகளும் 10 மீட்டர் நீளமான நைலோன் நூல் 50 சுருள்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை அறிவித்துள்ளது.

மெத்தவத்த பகுதியை சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, 1000 கிலோ அமோனியம் நைட்ரஜனுடன் மாத்தறை – கெக்குனதுர பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்