வைத்தியருக்கு கொலை மிரட்டல்: ரிஷாட் பதியுதீனிடம் சிறைச்சாலை தீர்ப்பாயம் விரைவில் விசாரணை

வைத்தியருக்கு கொலை மிரட்டல்: ரிஷாட் பதியுதீனிடம் சிறைச்சாலை தீர்ப்பாயம் விரைவில் விசாரணை

வைத்தியருக்கு கொலை மிரட்டல்: ரிஷாட் பதியுதீனிடம் சிறைச்சாலை தீர்ப்பாயம் விரைவில் விசாரணை

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2021 | 4:16 pm

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், மெகசின் சிறைச்சாலையில் வைத்தியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை தீர்ப்பாயத்தில் விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிறைச்சாலைகள் உதவி அத்தியட்சகரின் பரிந்துரைக்கு அமைய, தீர்ப்பாய விசாரணையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் 87-இன் முதலாம் பிரிவிற்கு அமைய, சிறைச்சாலைக்குள் ஏதேனும் குற்றச்செயலில் ஈடுபட்ட ஒருவரை, சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை செய்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுகின்றன.

அதற்கமைய, வைத்தியரை அச்சுறுத்தியமை தொடர்பான விடயத்தை தீர்ப்பாயத்தின் முன் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் நீதவான் ஒருவரினால் சிறைச்சாலைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்