பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது: பிரசன்ன ரணதுங்க

பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது: பிரசன்ன ரணதுங்க

பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது: பிரசன்ன ரணதுங்க

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2021 | 10:45 am

Colombo (News 1st) நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பொருந்தாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு அமைய, சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர முடியும் என அவர் கூறினார்.

Bio-bubble திட்டத்தினூடாக தெரிவு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.

சுற்றுலா பயணிகள் தங்களுக்கான ஹோட்டல்களுக்கு அறிவித்து, தாம் தங்குவதற்கான வசதி​களையும் ஏற்படுத்திக்கொள்தல் வேண்டும்.

அதற்கமைய, வௌிநாட்டு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தர எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்