டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படவுள்ளது

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படவுள்ளது

டிஜிட்டல் தடுப்பூசி அட்டை செப்டம்பரில் விநியோகிக்கப்படவுள்ளது

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2021 | 10:53 am

Colombo (News 1st) கொரோனா தடுப்பிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டமையை உறுதிப்படுத்தும் டிஜிட்டல் அட்டை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரமளவில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 75 வீதத்தை விட அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் கெ​ஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தியமைக்கான டிஜிட்டல் அட்டையை விநியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்