Pfizer தடுப்பூசிக்கு முழுமையான ஒப்புதல்

Pfizer தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி

by Bella Dalima 24-08-2021 | 4:33 PM
Colombo (News 1st) அவசரகால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த Pfizer தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸிற்கு எதிராக Pfizer நிறுவனம் மற்றும் ஜெர்மனியின் BioNTech நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசி மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. Moderna மற்றும் Johnson & Johnson ஆகிய நிறுவன தடுப்பூசிகளுக்கும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் அவசரகால அனுமதியை வழங்கியிருந்தது. இதையடுத்து, இந்த 3 தடுப்பூசிகளும் அமெரிக்க மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், Pfizer தடுப்பூசிக்கு அமெரிக்கா முழு ஒப்புதலை வழங்கி இருக்கிறது. இதுவரை அவசர கால பயன்பாட்டு அனுமதியை பெற்றிருந்த Pfizer தடுப்பூசிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு கழகம் முழுமையான அனுமதியை வழங்கி இருக்கிறது. இதன் மூலம் அந்த தடுப்பூசி மீதான நம்பிக்கை மக்களிடம் உயரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.