by Staff Writer 24-08-2021 | 11:30 AM
Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார்.
தபால்மா அதிபரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு கிடைத்துள்ள பொதிகள் உரியவர்களுக்கு ஓரிரு நாட்களில் கிடைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் பிரதி தபால்மா அதிபர் குறிப்பிட்டார்.
இதனிடையே குறைந்தபட்ச ஆளணியுடன் குறைந்த நாட்களுக்குள் மருந்து விநியோகத்தை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், சாதாரண தபால் சேவைகள் முன்னெடுக்கப்படமாட்டாது என பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ சுட்டிக்காட்டினார்.