குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் பலி; PCR சோதனையில் கொரோனா தொற்று உறுதி

குருநகரில் வாள்வெட்டுக்கு இலக்கான இளைஞர் பலி; PCR சோதனையில் கொரோனா தொற்று உறுதி

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2021 | 6:09 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் வால்வெட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR சோதனையினூடாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் டொக்கர் எஸ்.ஶ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமைய அடுத்தகட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

வால்வெட்டுக்கு இலக்கான நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயது இளைஞர் நேற்று (23) மாலை உயிரிழந்தார்.

தாக்குதலுக்கு இலக்கான மேலும் மூவர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குருநகரில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, நேற்று முன்தினம் மாலை கற்களால் தாக்கப்பட்டதுடன், பின்னர் வாள்வெட்டு தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என்பது குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்