அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கும் திட்டம் உள்ளதா?

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கும் திட்டம் உள்ளதா?

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2021 | 1:44 pm

Colombo (News 1st) தனியார் அல்லது அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

பலவந்தமாக அழுத்தங்களை பிரயோகித்து நிதியமொன்றை உருவாக்குவதற்கு முயசிகள் மேற்கொள்ளப்படாது எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் வௌியாகியுள்ள தகவல்களை பொறுப்புடன் நிராகரிப்பதாகவும் டலஸ் அழகப்பெரும மேலும் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்