பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2021 | 12:11 pm

Colombo (News 1st) பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலை இன்று (23) முதல் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, பாண் ஒரு இறாத்தல் 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.

பனிஸ் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

நுகர்விற்கு உரிய வகையில் தங்களின் உற்பத்திகளை மேற்கொள்வதால், விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்