குருநகரில் நால்வர் மீது கல்வீச்சு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்

குருநகரில் நால்வர் மீது கல்வீச்சு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்

குருநகரில் நால்வர் மீது கல்வீச்சு மற்றும் வாள்வெட்டு தாக்குதல்

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2021 | 4:29 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – குருநகரில் ​நேற்று (22) மாலை அடையாளம் தெரியாதோர் மேற்கொண்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

குருநகர் மருந்தகத்திற்கு அருகில் நேற்று மாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் மீதும் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த ஒருவர் மீதும் கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், வாள்வெட்டும் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்த 04 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் யார் என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்