இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜனுடன் கப்பல் நாட்டை வந்தடைந்தது

இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜனுடன் கப்பல் நாட்டை வந்தடைந்தது

எழுத்தாளர் Staff Writer

23 Aug, 2021 | 10:35 am

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து மேலும் 40 தொன் ஒக்சிஜனை ஏற்றிய கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

SLNS சக்தி என்ற இலங்கை கடற்படைக்கு சொந்தமான கப்பலே ஒக்சிஜனுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறினார்.

சென்னை துறைமுகத்திலிருந்து குறித்த கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது.

கப்பலிலிருந்து ஒக்சிஜன் தாங்கிகளை இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தியாவின் விசாகப்பட்டிணம் துறைமுகத்திலிருந்த ஒக்சிஜனை ஏற்றிய இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஷக்தி” கப்பல், கொழும்பு துறைமுகத்தை நேற்று (22) வந்தடைந்தது.

குறித்த கப்பலில் 100 தொன் ஒக்சிஜன் கொண்டுவரப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்