எவ்வித அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படாது

ஊரடங்கு காலத்தில் எவ்வித அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்படாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் 

by Staff Writer 22-08-2021 | 2:47 PM
Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள காலப்பகுதியில் எவ்வித அனுமதிப்பத்திரங்களும் பொலிஸாரினால் வழங்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தின் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ இதனை தெரிவித்தார்.