வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீரவிற்கு IPL வாய்ப்பு 

வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீரவிற்கு IPL வாய்ப்பு 

வனிந்து ஹசரங்க, துஷ்மந்த சமீரவிற்கு IPL வாய்ப்பு 

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2021 | 8:42 am

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் 2021 IPL கிரிக்கெட் தொடரில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட போட்டிகளில் கலந்துகொள்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அடம் ஸம்பாவுக்கு பதிலாக வனிந்து ஹசரங்கவை அணிக்கு அழைத்துள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் டேனியல் ஷாம்ஸுக்கு பதிலாக துஷ்மந்த சமீர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

2021 IPL கிரிக்கெட் தொடரின் 29 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றதுடன் COVID – 19 தொற்று காரணமாக எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.

அதனடிப்படையில், இரண்டாவது கட்ட போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்