ஆப்கானிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவித்தல்

ஆப்கானிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவித்தல்

ஆப்கானிலுள்ள தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா விடுத்துள்ள அறிவித்தல்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2021 | 10:58 am

Colombo (News 1st) நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் விமான நிலையத்தை தாக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் காரணமாக இது அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய வாயில்களுக்கு வெளியே பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாக அமெரிக்கா தமது பிரஜைகளுக்கு தெரிவித்துள்ளது.

அரச முகவர் ஒருவர் தனிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டால் மாத்திரம் விமான நிலையத்திற்கு செல்லுமாறு அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளது.

இந்தநிலையில், ஆப்கானிஸ்தானின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி தற்போது ஒருவாரமாகின்ற நிலையில், அங்குள்ள வௌிநாட்டுப் பிரஜைகள் தற்போது தத்தமது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இதனிடையே, விமான நிலையம் மிகவும் ஆபத்தானது எனவும் விமான நிலையத்திற்கு செல்வது சாத்தியமில்லை எனவும் ஜெர்மனி அரசாங்கம் அறிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்