by Staff Writer 21-08-2021 | 11:42 AM
Colombo (News 1st) பலாங்கொடை - பின்னவல பிரதேசத்தில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் நேற்று (20) உயிருடன் மலைப்பாம்பொன்று பிடிக்கப்பட்டுள்ளது.
பின்னவல பிரதேசத்திற்கு வருகை தந்த மலைப்பாம்பினை கண்ட பிரதேசவாசி ஒருவர் நேற்று இரவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகைதந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிரதேச மக்களின் உதவியுடன் சுமார் இரண்டு மணித்தியால பிரயத்தனத்துடன் மலைப்பாம்பை பிடித்துள்ளனர்.
இந்த மலைப்பாம்பு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பும் அப்பிரதேசத்திற்கு வந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
சுமார் 12.5 அடி நீளமான இந்த மலைப்பாம்பை சமனல இயற்கை வனத்தினுள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.