தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்; பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்; பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்; பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2021 | 8:55 am

Colombo (News 1st) தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பஸ் மற்றும் ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சரக்கு மற்றும் எரிபொருள் கொண்டுசெல்லும் 08 ரயில்கள் மாத்திரமே இன்று (21) சேவையில் ஈடுபடுமென ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழமையான பயணிகள் போக்குவரத்துக்காக ரயில்கள் சேவையில் ஈடுபடாதென அவர் இதன்போது கூறியுள்ளார்.

இதனிடையே, சுகாதாரத் துறையினருக்காக விசேட பஸ் போக்குவரத்து முன்னெடுக்கப்படுமென இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச். பண்டுக்க ஸ்வர்ண ஹங்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் துறைமுகங்கள் மற்றும் சுங்கம் உள்ளிட்டவற்றில் தொழில் புரியும் ஊழியர்களுக்காகவும் சில பஸ் போக்குவரத்துகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்