கரடியனாறு – காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கரடியனாறு – காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கரடியனாறு – காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2021 | 10:27 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காயங்குடா பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செங்கலடி – பதுளை பிரதான வீதியூடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்தவரை காட்டு யானை தாக்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் தம்பானம்வெளி கொடுவாமடு கிராமத்தைச் சேர்ந்த 44 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்