ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளை வௌிப்படுத்துமாறு கோரி கறுப்பு கொடி போராட்டம்

ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளை வௌிப்படுத்துமாறு கோரி கறுப்பு கொடி போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

21 Aug, 2021 | 12:20 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் குறித்து நாட்டிற்கு வௌிப்படுத்துமாறு கோரி தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழுவினால் இன்றைய தினம் (21) அமைதிவழி எதிர்ப்பிற்கான தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்றைய தினம் “அமைதிவழி கறுப்பு கொடி” தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு இன்று அனைத்து வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் கறுப்பு கொடியைப் பறக்கவிட்டு இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் இணைந்துகொள்ளுமாறு தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழுவின் உறுப்பினர், அருட்தந்தை சிரில் காமினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்