by Staff Writer 20-08-2021 | 9:21 PM
Colombo (News 1st) கொரோனா காலத்தில் ஏற்படும் குருதித் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (20) காலை இடம்பெற்றது.
யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு தலைமையில் இந்த இரத்த தானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கலந்துகொண்டு இரத்த தானம் செய்தனர்.
குறித்த குருதியை யாழ். போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் எஸ். சிறிபவானந்தராஜா முன்னெடுத்துள்ளார்.